தமிழ் சினிமா

‘தங்கலான்’ நடிகரை லண்டனில் சந்தித்த மாளவிகா மோகனன்

செய்திப்பிரிவு

லண்டன்: பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘தங்கலான்’. பசுபதி, பார்வதி, மாளவிகா மோகனன், ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டஜிரோனோ உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கோலார் தங்க வயல் பின்னணியில் படம் உருவாகிறது. ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் இதில் நடித்துள்ள மாளவிகா மோகனன் லண்டன் சென்றுள்ளார். தங்கலானில் நடித்துள்ள ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டஜிரோனோவை அவர் அங்குச் சந்தித்துள்ளார். இருவரும் சந்தித்த புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

பல மாதங்களுக்குப் பிறகு அவரை லண்டனில் சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இருவரும் ’தங்கலான்’ படத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT