தமிழ் சினிமா

ஜப்பான் அழகு சாதன நிறுவனத்தின் முதல் இந்திய தூதரானார் தமன்னா

செய்திப்பிரிவு

சென்னை: நடிகை தமன்னா, தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வருகிறார். ‘ஜெயிலர்’ படத்தில் அவர் ஆடிய ‘காவாலா’ பாடல் சூப்பர் ஹிட்டானது. இப்போது இந்தி வெப் தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார். சில நிறுவனங்களுக்கு விளம்பர தூதராகவும் இருக்கும் நடிகை தமன்னா, இப்போது ஷிஷீடோ (Shiseido) என்ற ஜப்பான் நிறுவனத்தின் அழகு சாதன பொருட்களுக்கு இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிறுவனத்தின் முதல் இந்திய தூதர் தமன்னாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

“நூற்றாண்டுக்கும் மேலாகத் தரத்தைத் தொடர்ந்து பராமரித்து வரும் ஷிஷீடோ நிறுவனத்துடன் இணைந்ததில் மகிழ்ச்சி. அழகு என்பது வெளிப்புற தோற்றம் மட்டுமல்ல, தங்கள் சொந்த மேனியின் நிறத்தில் தன்னம்பிக்கை பெறுவது என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார் தமன்னா.

SCROLL FOR NEXT