தமிழ் சினிமா

பணகுடிக்கு வந்த நடிகர் ரஜினி: ரசிகர்கள் உற்சாகம்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி: லைகா நிறுவனம் தயாரிப்பில்,இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தலைவர்-170 படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கடந்த 4-ம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பூஜையுடன் தொடங்கி, 5 நாட்கள் முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. தொடர்ந்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் உள்ள ஓடு தயாரிப்பு கூடத்தில் நேற்று தொடங்கியது.

பணகுடி மற்றும் அருகேஉள்ள ஆரல்வாய்மொழி பகுதிகளில் சண்டைக் காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு காட்சிகள் 3 நாட்கள் படமாக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. இந்த படப்பிடிப்புக்காக நடிகர் ரஜினி கன்னியாகுமரியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இருந்து பணகுடிக்கு நேற்று காரில் வந்தார்.

படப்பிடிப்பு தளம் அருகில்வரிசையாக நின்று கொண்டிருந்த ரசிகர்களைப் பார்த்தவுடன்ரஜினி காரை நிறுத்தி, ரசிகர்களுக்கு கைகொடுத்தும், வணக்கம் செலுத்தியும் அவர்களை உற்சாகப்படுத்தினார். பின்னர்அவர் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

SCROLL FOR NEXT