'கத்தி' படத்தின் இசையினை செப்டம்பர் 20ம் தேதி லண்டனில் பிரம்மாண்டமான முறையில் வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய், சமந்தா, சதீஷ், நில் நிதின் முகேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'கத்தி' படத்தினை இயக்கி வருகிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.
தீபாவளி வெளியீடாக வெளிவரவிருக்கும் இப்படத்தின் இசையினை செப்டம்பர் 20ம் தேதி லண்டனில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். லைக்கா நிறுவனரின் பிறந்த நாள் விழா லண்டனில் செப்.20ம் தேதி நடைபெற இருக்கிறதாம். இவ்விழாவில் 'கத்தி' படக்குழு கலந்து கொண்டு, படத்தின் இசையினை அவ்விழாவில் வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே 'கத்தி' படத்தின் தீம் மியூசிக் விஜய் பிறந்த நாளன்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.