தமிழ் சினிமா

லண்டனில் படமான ’சில நொடிகளில்’

செய்திப்பிரிவு

ரிச்சர்ட் ரிஷி, புன்னகை பூ கீதா, யாஷிகா ஆனந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள திரைப்படம், ‘சில நொடிகளில்’. வினய் பரத்வாஜ் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு அபிமன்யு சதானந்தன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 5 இசை அமைப்பாளர்கள் இசை அமைத்துள்ளனர். பின்னணி இசையை பாலிவுட் இசை அமைப்பாளர் ரோஹித் குல்கர்னி செய்துள்ளார்.

லண்டனில் வசிக்கும் தம்பதியைச் சுற்றி நடக்கும் மர்ம கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது. லண்டன் அருகில் உள்ள செம்ஸ்ஃபோர்டு (Chelmsford) என்ற நகரத்தில் இதன் முழுபடப்பிடிப்பும் நடந்துள்ளது. புன்னகை பூ கீதாவின் மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் இந்தப் படத்தை வெளியிடுகிறது

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT