சென்னை: “இந்தியாவை தூய்மையாக வைப்போம்” என நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று(அக்.,01) நடந்த தூய்மை இந்தியா திட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்து இருந்தார். அதன்படி பல்வேறு இடங்களில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள் மற்றும் பாஜக தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில் தூய்மை இந்தியா திட்டத்தையொட்டி நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில், “தூய்மையான சூழலில் இருந்தே ஆரோக்கியமான சூழல் தொடங்குகிறது. இந்தியாவை தூய்மையாக வைப்போம்” என பதிவிட்டுள்ளார்.