தமிழ் சினிமா

“மனிதக் கலைமகன்” - சிவாஜிக்கு கமல்ஹாசன் புகழாரம்

செய்திப்பிரிவு

சென்னை: மறைந்த நடிகர் சிவாஜியின் பிறந்தநாளையொட்டி நடிகர் கமல்ஹாசன் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “பல நூறு மனிதர்களைத் தனக்குள்ளிருந்து எடுத்து உலகத்துக்குத் தந்த ஒற்றை மனிதக் கலைமகன். நடிப்பாக அல்ல, வாழ்க்கையாகக் கலையை முன்வைத்தவர். உலகின் சிறந்த நடிகர்களுக்கு, தமிழ்நாட்டின் பதில் என்று சொல்லத் தக்கவர், மாபெரும் நடிப்புக் கலைஞர் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் இன்று. வாழ்த்துவது நமக்குப் பெருமை” என பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT