தமிழ் சினிமா

சலூன் நாற்காலி.. ரத்தம் தோய்ந்த கத்தி: விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

செய்திப்பிரிவு

சென்னை: விஜய் சேதுபதியின் 50வது படத்துக்கு ‘மகாராஜா’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்துக்கு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

விஜய் சேதுபதி நடிக்கும் 50வது படத்தை ’குரங்கு பொம்மை’ இயக்குநர் நிதிலன் சுவாமிநாதன் இயக்க உள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் மம்தா மோகன்தாஸ், அனுராஜ் காஷ்யப், நட்டி நடராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். அஜனீஷ் லோகநாத் இசையமைக்கிறார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ’மகாராஜா’ படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர். இதில் இடிந்த நிலையில் காணப்படும் ஒரு இடத்தில், சலூன் நாற்காலியில் விஜய் சேதுபதி அமர்ந்துள்ளார். கையில் ரத்தம் தோய்ந்த பட்டா கத்தி ஒன்றை வைத்துள்ள அவரது உடல் முழுவதும் ரத்தக் கறை உள்ளது. காது அறுபட்டு கட்டு போடப்பட்டுள்ளது. இப்படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருக்கலாம் என்பதை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலமே தெரிந்து கொள்ள முடிவதாக நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.

SCROLL FOR NEXT