தமிழ் சினிமா

“மிகப்பெரிய சிந்தனையாளர்”: மாரிமுத்து குறித்து நினைவுகூர்ந்த வடிவேலு

செய்திப்பிரிவு

மதுரை: மதுரை விமான நிலையத்தில் நடிகர் வடிவேலு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நடிகர் மாரிமுத்து இறந்த செய்தியை கேள்விப்பட்டபோது மிகவும் கஷ்டமாகி விட்டது. ராஜ்கிரண் அலுவலகத்தில் இருந்தபோது நானும், அவரும் நெருங்கி பழகியுள்ளோம். அவருடைய ‘கண்ணும் கண்ணும்’ படத் தில் நகைச்சுவை காட்சியில் அடித்துக் கேட்டாலும் சொல்லாதீர்கள் என்ற வசனம் வரும். அது மாரிமுத்துவுடையது. கிணற்றை காணோம் நகைச்சுவையையும் அவர்தான் உருவாக்கினார். மிகப்பெரிய சிந்தனையாளர், மனம் விட்டு சிரிப்பார். இவர் மறைந்தது திரையுலகுக்கு பெரிய அதிர்ச்சி, இழப்பு. இவ்வாறு அவர் கூறி னார். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்த கேட்டபோது திறந்த கதவுதானே. யார் வேண்டு மானாலும் வரலாம். நீங்களும் வரலாம் என்றார்.

SCROLL FOR NEXT