தமிழ் சினிமா

சீரியஸ் களத்தில் சி.எஸ்.அமுதன் - விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’ ட்ரெய்லர் எப்படி?

செய்திப்பிரிவு

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரத்தம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘தமிழ்ப் படம்’, ‘தமிழ்ப் படம் 2’ மூலம் தமிழ் சினிமாவை கலாய்த்த சி.எஸ்.அமுதன் அடுத்தாக விஜய் ஆண்டனியை வைத்து உருவாக்கியிருக்கும் படம் ‘ரத்தம்’. மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘தமிழ்ப் படத்துக்கு இசையமைத்த கண்ணன் நாராயணன் இந்தப் படத்துக்கும் இசையமைத்துள்ளார். இன்ஃபினிடி ஃபிலிம் வென்ச்சர்ஸ் சார்பில் கமல் போரா, லலிதா தனஞ்செயன், பிரதீப், பங்கஜ் போரா, விக்ரம் குமார் ஆகியோர் படத்தை தயாரித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - தனது தனித்துவமான கலாய் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இயக்குநர் அமுதன் இம்முறை சீரியஸான அரசியல் கதைக்களத்தில் இறங்கியிருக்கிறார். தலைப்புக்கு ஏற்றார்போல ட்ரெய்லர் ரத்தம், கொலையுடனே தொடங்குகிறது. தனது வழக்கமான சீரியஸ் முகபாவனையுடன் முழுக்க தாடியை வைத்துக்கொண்டும், தாடியில்லாமலும் இரண்டு லுக்குகளில் காட்சியளிக்கிறார் விஜய் ஆண்டனி. சீரியஸாக செல்லும் காட்சிகளின் நடுவே நெட்டிசன்களின் வீடியோக்களை கலாய்க்கும் வகையில் அணுகியிருக்கிறார் இயக்குநர். படம் செப்டம்பர் 28-ம் தேதி வெளியாகிறது. ட்ரெய்லர் வீடியோ:

SCROLL FOR NEXT