தமிழ் சினிமா

‘தங்கலான்’ படத்துக்கு நானும் வெயிட்டிங்: மாளவினா மோகனன் பகிர்வு

செய்திப்பிரிவு

சென்னை: பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தங்கலான்’ படத்துக்காக தான் ஆவலுடன் காத்திருப்பதாக நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘தங்கலான்’. பசுபதி, பார்வதி, மாளவிகா மோகனன், ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டஜிரோனோ உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கோலார் தங்க வயல் பின்னணியில் படம் உருவாகிறது. ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் இந்தபடத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இப்படத்தை அடுத்த ஆண்டு திரைக்குக் கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில், ‘தங்கலான்’ படத்தின் ரிலீஸுக்கு ரசிகர்களைப் போலவே தானும் ஆவலுடன் காத்திருப்பதாக நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.

தங்கலான் அப்டேட் குறித்து ரசிகர் ஒருவரின் கேள்விக்கு இன்ஸ்டாகிராம் நேரலையில் பதிலளித்த அவர், “’தங்கலான்’ குறித்த அப்டேட் இப்போது எதுவும் இல்லை. ஆனால் நானும் அப்டேட்டுக்காக காத்திருக்கிறேன். இந்த கேள்வியை பார்த்த பிறகு பா.ரஞ்சித்துக்கு நான் மெசேஜ் அனுப்பப் போகிறேன். இப்படத்தின் ரிலீசுக்காக நானும் உங்களைப் போலவே ஆவலுடன் காத்திருக்கிறேன். கடந்த அக்டோபரில் இப்படத்தைத் தொடங்கினோம். படத்தை ஒட்டுமொத்த உலகமும் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT