தமிழ் சினிமா

தமிழில் சன்னிலியோன் அறிமுகமாகும் வீரமாதேவி

ஸ்கிரீனன்

பிரபல இந்தி நடிகையான சன்னி லியோன் தமிழில் அறிமுகமாகவுள்ள படத்திற்கு 'வீரமாதேவி' என பெயரிட்டு இருக்கிறார்கள்.

'சாமிடா', 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்', 'சவுகார்பேட்டை', 'பொட்டு', 'கன்னியும் காளையும் செம காதல்' ஆகிய படங்களை இயக்கிவர் வி.சி.வடிவுடையான். சரித்திரக் கதையை அடிப்படையாகக் கொண்டு இவர் இயக்கும் புதிய படத்தில் சன்னி லியோன் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

நாசர், நவ்தீப் உள்ளிட்ட பலர் சன்னி லியோனோடு நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், இப்படத்தின் தலைப்பு 'வீரமாதேவி' என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

ஸ்டீவ்ஸ் கார்னர் பெரும் பொருட்செலவில் இப்படத்தினை தயாரிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய 3 மொழிகளிலும் இப்படம் உருவாகவுள்ளது.

SCROLL FOR NEXT