தமிழ் சினிமா

குயின் ரீமேக்: மறுத்த சமந்தா

ஸ்கிரீனன்

இந்தியில் பெரும் வரவேற்பை பெற்ற 'குயின்' தென்னிந்திய ரீமேக்கில் நடிக்க சமந்தா மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

மார்ச் 2014ல் விகாஸ் பகால் இயக்கத்தில் கங்கனா ராவத் நடிப்பில் வெளியான படம் 'குயின்'. அனுராக் காஷ்யப் மற்றும் விக்கிரமாதித்யா தயாரித்த இப்படத்தினை வயாகாம் நிறுவனம் வெளியிட்டது. விமர்சகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் இப்படம் அமோக வரவேற்பைப் பெற்றது.

பெரும் வரவேற்பை பெற்ற இப்படத்தின் கதையினை எந்த மொழியில் வேண்டுமானாலும் எடுக்கலாம் என்பதால் இப்படத்தின் ரீமேக் உரிமைக்கு பலரும் போட்டியிட்டார்கள். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமையை நடிகர் தியாகராஜன் வாங்கியிருந்தார்.

பல்வேறு நடிகைகளிடம் கங்கனா ராவத் வேடத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்கள். சமந்தாவை அணுகிய போது, "’குயின்’ படத்தின் கதை மற்றும் திரைக்கதை அமைப்பு வட இந்தியருக்கு மட்டுமே சரியாக வரும். தென்னிந்தியாவிற்கு ஏற்றவாறு நிறைய மாற்றாங்கள் செய்ய வேண்டும். அப்படத்தில் நான் நடிக்க மாட்டேன்" என்று கூறியிருக்கிறார்.

முழுக்க முழுக்க நாயகியை முன்னிலைப்படுத்திய நகரும் கதை என்பதால், இப்படத்தில் கங்கனா ராவத் வேடத்தில் யார் நடிக்க இருக்கிறார் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

SCROLL FOR NEXT