தமிழ் சினிமா

“காந்தியைக் கொன்றவர்கள் எப்படி ‘ஜெய்பீம்’ படத்துக்கு விருது தருவார்கள்?” - பிரகாஷ்ராஜ்

செய்திப்பிரிவு

சென்னை: ‘ஜெய்பீம்’ படத்துக்கு தேசிய விருது கொடுக்கப்படாததற்கு நடிகர் பிரகாஷ்ராஜ் அதிருப்தி தெரிவித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “காந்தியைக் கொன்றவர்கள், இந்திய அரசியலமைப்பை தந்த அம்பேத்கரின் சமத்துவ தத்துவத்தை கொல்ல முயற்சிப்பவர்கள் ‘ஜெய்பீம்’ திரைப்படத்துக்கு எப்படி விருது தருவார்கள்? #Justasking” என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக ‘ஜெய்பீம்’ படம் தேசிய விருது அறிவிப்பில் புறக்கணிக்கப்பட்டது குறித்து ஒளிப்பதிவாளர் பிசிஸ்ரீராம், சுசீந்திரன், நானி, அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT