தனுஷ் நடிப்பில் வெளிவர இருக்கும் 'வேலையில்லா பட்டதாரி' படத்துடன் சிம்பு நடிக்கும் 'வாலு' ட்ரெய்லர் வெளியிடப்படுகிறது.
தனுஷ், அமலா பால், விவேக், இயக்குநர் சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'வேலையில்லா பட்டதாரி'. வேல்ராஜ் இயக்க, அனிருத் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தை தனுஷ் தயாரிக்க, தமிழ்நாட்டு உரிமையை மதன் வாங்கியிருக்கிறார்.
ஜூலை 18ம் தேதி வெளிவர இருக்கும் இப்படத்துடன், சிம்பு நடிப்பில் தயாராகி இருக்கும் 'வாலு' படத்தின் ட்ரெய்லர் இணைக்கப்படுகிறது. விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா நடித்திருக்கும் 'வாலு' திரைப்படம் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வருகிறது. படத்தின் டீஸர் மற்றும் ட்ரெய்லர் இன்னும் வெளிவராததால் இப்படம் வெளியாகாத காரணத்தால் படம் தாமதமாகும் என்று கருதப்பட்டது.
இந்நிலையில், படத்தின் ட்ரெய்லர் தற்போது 'வேலையில்லா பட்டதாரி' படத்துடன் இணைத்து வெளியிடப்படுவதால் 'வாலு’ விரைவில் வெளியாகும் என்று கருதப்படுகிறது. ஆகஸ்ட் 15ம் தேதி 'அஞ்சான்' படத்துடன் 'வாலு' வெளியாகும் என்கிறது கோடம்பாக்க வட்டாராம்.