தமிழ் சினிமா

கவனம் ஈர்க்கும் ‘இறுகப்பற்று’ படக்குழுவின் ‘தி கேப்’ வீடியோ

செய்திப்பிரிவு

சென்னை: விக்ரம் பிரபு நடித்துள்ள ‘இறுகப்பற்று’ படக்குழு சார்பில் ‘தி கேப்’ என்ற தலைப்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. வித்தியாசமான இந்த வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

'மாயா', 'மாநகரம்', 'மான்ஸ்டர்' மற்றும் 'டாணாக்காரன்' போன்ற படங்களின் தயாரித்த பொடன்ஷியல் ஸ்டூடியோவின் அடுத்த தயாரிப்பு ‘இறுகப்பற்று’. ‘எலி’, ‘தெனாலிராமன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் இப்படத்தை இயக்குகிறார். விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். கார்த்திக் நேதா பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

இந்நிலையில், படக்குழு சார்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ‘தி கேப்’ என தலைப்பிடப்பட்டுள்ள இந்த வீடியோவில் பல்வேறு தம்பதிகள் இடம்பெற்றுள்ளனர். அவர்களிடம் அவர்களின் திருமண வாழ்க்கை சார்ந்து 21 கேள்விகள் கேட்கப்படுகிறது. அந்த கேள்விகளுக்கான அவர்களின் பதிலும், இருவரும் திருமண உறவில் எவ்வளவு விலகியிருக்கிறார்கள் என்பதை காட்டும் விதத்திலும் நேர்த்தியாக வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. தம்பதிகள் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும் பொருட்டும் படத்தின் தன்மையை விளக்கும் வகையிலும் இந்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

SCROLL FOR NEXT