சூர்யா நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் ‘அஞ்சான்’ படத்தின் வீடியோ கேம் செவ்வாய்கிழமை வெளியிடப்பட்டது. இந்த வெளியீட்டு விழாவில் சூர்யா, இயக்குநர் லிங்குசாமி மற்றும் யுடிவி தனஞ்செயன், பிருந்தா சாரதி ஆகியோர் கலந்துகொண்டனர்.
அஞ்சான் படத்தின் ரேஸ் வார்ஸ் கேமை வெளியிட்டு நடிகர் சூர்யா பேசியதாவது :
‘கிரிஷ்’, ‘கோச்சடையான்’ வரிசையில் இன்று ‘அஞ்சான்’ படமும் மொபைல் கேமாக வெளிவருவது பெருமையளிக்கிறது. பொதுவாக எனக்கு வீடியோ கேம் பிடிக்கும். அதுவும் அதில் துப்பாக்கி சுடுதல், கார் துரத்தல் இரண்டும் முக்கியம். அது இரண்டுமே ‘அஞ்சான்’ வீடியோ கேமில் உள்ளது.
நிஜமான காரில் அமர்ந்து மற்ற காரை இடிப்பது, துரத்துவது, சுடுவது எல்லாம் முடியாது. இந்த வீடியோ கேமில் என் தோற்றம் இடம் பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லோரும் மொபைல் கேமை பாருங்கள். உங்கள் நேரத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள்.
இன்னொரு முக்கியமான விஷயம். தம்பி கார்த்தி நலமுடன் இருக்கிறார். ஃபுட் பாய்சன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இப்போது எல்லோரையும் கிண்டல் செய்துகொண்டு நலமாக உள்ளார்.
இவ்வாறு சூர்யா பேசினார்.