தமிழ் சினிமா

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி புதிய தேதி அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: ஏ.ஆர்.ரஹ்மான் ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி ஒன்றை கடந்த 12-ம் தேதி நடத்த இருந்தார். இதற்காக, சென்னை பனையூரில் உள்ள ஆதித்யா ராம் பேலஸ் சிட்டியில், பிரம்மாண்ட மேடையும் ரசிகர்களுக்கான இருக்கைகளும் தயார் செய்யப்பட்டிருந்தன. ஆனால், மழை காரணமாகவும் நிகழ்ச்சி நடைபெற இருந்த திறந்த வெளி அரங்கில் தண்ணீர் தேங்கி இருந்ததாலும் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்தார். புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி செப்.10-ம் தேதி இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி இந்நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

SCROLL FOR NEXT