தமிழ் சினிமா

எனக்கு பெரிய ஆசைகள் இல்லை: மனம் திறக்கிறார் சுவாதி

செய்திப்பிரிவு

படங்களில் எப்படியோ, அப்படித்தான் நேரிலும் படபடவென்று உற்சாக மாகப் பேசுகிறார் சுவாதி. ‘சுப்பிரமணியபுரம்’ படத்தில் அறிமுகமாகி பல படங்களில் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த இவர் தற்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ‘யட்சன்’ படத்தில் நடித்துவருகிறார். அந்த பட வேலைகளில் பிஸியாக இருந்த சுவாதியைச் சந்தித்தோம்.

தமிழ், மலையாளம், தெலுங்கு என்று மூன்று மொழிகளிலும் கவனம் செலுத்துகிறீர்கள். மூன்று மொழிப் படங்களுக்கும் என்ன வித்தியாசம்?

ஒவ்வொரு மொழியும் ஒரு அழகுதான். தெலுங்குப் படங்கள் என்றால் வீட்டில் இருந்து படப் பிடிப்புக்கு போவேன். அதுவே ஜாலியாக இருக்கும். மலை யாளப் படங்களில் ஓவர் மேக்கப் இருக்காது. அங்குள்ள எதார்த் தத்தை நான் ரொம்பவே ரசிப் பேன். இந்த இரண்டு மொழிப் படங்களுக்கும் நடுவில் தமிழ்ப் படங்கள் இருக்கிறது. இந்த மூன்று மொழிகளிலும் கிரியேட்டிவிட்டி கொட்டிக் கிடக்கிற இடம் தமிழ் சினி மாத்தான். இன்றைக்கு பாலிவுட்டில் கலக்கும் பல டெக்னீஷியன்கள் தமிழ், மலையாளம் என்று தென் பகுதியைச் சேர்ந்தவர் கள்தான். என்னைப் பொருத்த வரை இந்த மூன்று மொழிப் படங்களும் எனக்கு முக்கியம்.

உங்கள் கதாபாத் திரங்களை எந்த அடைப்படையில் தேர்ந்தெடுக்கிறீர்கள்?

முதலில் நான் ஒப்புக் கொள்ளும் படத்தின் டீம் எனக்கு பிடித்தி ருக்க வேண் டும். நன்றாக நடிக்க சூழல் ரொம்ப வும் முக்கியம். பொதுவாக எனக்கு சாவித்ரி, தேவி நடித்த மாதிரி வேடங் களில் நடிக்கவேண்டும் என்ற பெரிய ஆசைகளெல்லாம் இல்லை. அதனால் எதிர்காலத் திட்டம் என்று எதுவும் இல்லை.

‘யட்சன்’ தவிர இப்போது வேறு என்னென்ன படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள்?

நான் ஒரே நேரத்தில் 2,3 படங்கள் நடிக்க ஒப்புக்கொள்ள மாட்டேன். இப்போது ‘யட்சன்’படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

அதற்கிடையே கிடைக்கும் நேரத்தில் புதிய மலையாளப்படம் ஒன்றை ஒப்புக் கொண்டிருக்கிறேன். அந்தப் படத்தின் வேலைகளும் சில நாட்களில் தொடங்க வுள்ளது.

தொடர்ந்து புதியவர்களோடு மட்டுமே ஜோடி சேருகிறீர்களே, சீனியர் நடிகர் என்றால் பிடிக்காதா?

எனக்கு நல்ல படம், நல்ல வேடம் இருந்தால் மட்டும் போதும். பெரிய நடிகையாக வேண்டும் என்று ஆசைப் பட்டால் வீட்டுக்கு போக வேண்டியதுதான். எனக்கு அப்படி அடம் பிடிக்கத் தெரியாது. பெரிய பட்ஜட் படங்கள், பெரிய இயக்குநர், பெரிய ஹீரோ என்று பயணிக்க விரும்பும்போது அதற்காக நிறைய மெனக்கெட வேண்டும். இது போன்ற மெனக்கெடல்கள் இருந்தால் வாழ்க்கையை நிம்மதியாக வாழ முடியாது. 5 ஆண்டுகளோ, 10 ஆண்டுகளோ இந்த துறையில் இருக்கும்வரை ஜாலியாக பயணம் செய்யவேண்டும் என்பதே என் கொள்கை. எனக்கு படங்களிலும் நடிக்க வேண்டும். அதே நேரத்தில் வடபழனி, பாண்டிபஜார் மாதிரியான இடங்களுக்கு இயல்பாக போய்ட்டும் வரணும். அதுதான் பிடிக்கும்.

உங்கள் பொழுதுபோக்கு?

நான் டிவிட்டர், பேஸ்புக் போன்ற வற்றில் எல்லாம் இல்லை. பின்டரஸ்ட் அப்ளிகேஷனில் உள்ள ஜோக்ஸ், கமென்ட்ஸ், மிருகங்கள் எல்லாம் ரொம்ப பிடிக்கும். அதுதான் என் டெக்னாலஜி பொழுதுபோக்கு. மற்றபடி எளிமையான வாழ்க்கைதான்.

ரொம்ப அழகா பாடுவீங்களாமே?

பொய். கொஞ்சம் பாடத் தெரியும். அதுவும் தெலுங்கில் மட்டும்தான் முயற்சிக் கிறேன். பாடுவதற்கு ஒரு தனித் திறமை இருக்கணும். முதலில் தமிழ் நல்லா பேசக்கற்றுக்கொள்வோம்னு பாட்டை விட்டாச்சு.

கிளாமராக நடிக்க மாட்டீர்களா?

அதுபற்றி எதுவும் யோசிக்கவில்லை. இதுவரைக்கும் நான் நடித்த கதாபாத்திரங் களுக்கு கிளாமர் அவசியமில்லாமல் இருந்தது. நான் தேர்வு செய்கிற கதாபாத் திரங்களுக்கு அது அவசியமில்லைன்னு நினைக்கிறேன்.

கிசுகிசு என்றால் அலர்ஜியாமே?

ரொம்பவே போர். கிசுசிசுக்களில் எப்பவுமே பாதிதான் உண்மையாக இருக்கு.

திருமணம் எப்போது?

எனக்கு தெரியாது. அதைப்பற்றி பேச ணும்னா மட்டும் எனக்கு பயமாக இருக்கு.

SCROLL FOR NEXT