தமிழ் சினிமா

அஜித் - சிவா இணையும் படத்தின் பெயர் விசுவாசம்: சத்யஜோதி பிலிம்ஸ் அறிவிப்பு

செய்திப்பிரிவு

நடிகர் அஜித்தை வைத்து இயக்குநர் சிவா இயக்கும் அடுத்த படத்துக்கு 'விசுவாசம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதை படத்தைத் தயாரிக்கும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பாரம்பரிய பட நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டி.தியாகராஜன்,   தங்களது அடுத்த தயாரிப்பை தலைப்புடன் அறிவித்தார்.

அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில், "அஜித் குமார் நடிக்க, சிவா இயக்கும் இந்த படத்துக்கு 'விசுவாசம்'  என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. 2018 தீபாவளி வெளியீடாக 'விசுவாசம்' வெளிவரும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT