தமிழ் சினிமா

ரசிகர்களுக்கு சூர்யா நன்றி

செய்திப்பிரிவு

சென்னை: கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2008-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம், ‘வாரணம் ஆயிரம்’. இதில் சூர்யா, சமீரா ரெட்டி, சிம்ரன், ரம்யா உட்பட பலர் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார். இந்தப் படம் தெலுங்கில், ‘சூர்யா சன் ஆஃப் கிருஷ்ணன்’ என்ற பெயரில் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் இந்தப் படத்தை கடந்த சில நாட்களுக்கு முன் தெலுங்கில் ரீ ரிலீஸ் செய்தனர். 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்துள்ள நிலையில் மீண்டும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ‘அஞ்சல’ பாடலுக்குத் திரையரங்குகளில் ரசிகர்கள் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் அந்த வீடியோவை, தனது ட்விட்டர் பக்கத்தில் டேக் செய்துள்ள சூர்யா, ‘உங்கள் அன்பு ஆச்சரியப்படுத்துகிறது’ என்று கூறி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT