தமிழ் சினிமா

2015ல் மீண்டும் இணையும் சூர்யா - ஹரி

செய்திப்பிரிவு

2015ம் ஆண்டு மீண்டும் இயக்குநர் ஹரி இயக்கும் படத்தில் சூர்யா நடிக்க திட்டமிட்டு இருக்கிறார்.

'ஆறு', 'சிங்கம்', 'சிங்கம் 2' உள்ளிட்ட படங்கள் மூலம் வரவேற்பை பெற்ற கூட்டணி இயக்குநர் ஹரி - சூர்யா. இவர்கள் இணைந்த படங்கள் அனைத்துமே வசூலை வாரிக் குவித்ததால், இவர்கள் மீண்டும் இணையக் கூடும் என்று செய்திகள் வெளியாகின.

அதனை உறுதிச் செய்வது போன்று, 'அஞ்சான்' டீஸருக்கான சக்சஸ் பார்ட்டியில் "அடுத்தாண்டில் மீண்டும் இயக்குநர் ஹரியுடன் இணைந்து பணியாற்ற இருக்கிறேன். அப்படம் 'சிங்கம் 3' ஆக இருக்குமா என்று இப்போது கூற முடியாது" என்று கூறினார்.

சூர்யா பேச்சின் மூலம் இயக்குநர் ஹரியுடன் இணையவிருப்பது உறுதியாகி இருக்கிறது. தற்போது விஷாலை வைத்து 'பூஜை' படத்தை இயக்கி வரும் ஹரி, அதற்குப்பிறகு சூர்யா நடிக்கவிருக்கும் படத்தின் பணிகளை மேற்கொள்ளவிருக்கிறார்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் 'மாஸ்' படத்தில் நடிக்கவிருக்கும் சூர்யா, அப்படத்தைத் தொடர்ந்து ஹரி இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ஹரி - சூர்யா இணையவிருக்கும் படம் கண்டிப்பாக 'சிங்கம் 3' ஆக இருக்கும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

SCROLL FOR NEXT