தமிழ் சினிமா

அயன் படத்துக்காக நட்டியை அணுகினேன்: இயக்குநர் கே.வி.ஆனந்த்

ஸ்கிரீனன்

'அயன்' படத்தில் ஜெகன் வேடத்தில் நடிக்க முதலில் ஒளிப்பதிவாளர் நட்டியிடம் தான் பேசியதாக இயக்குநர் கே.வி.ஆனந்த் கூறியுள்ளார்.

வினோத் இயக்கத்தில் நட்டி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'சதுரங்க வேட்டை'. மனோபாலா தயாரித்த படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

இப்படத்திற்கு விமர்சகர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. பலரும் நட்டி நடிப்பை பாராட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் இயக்குநர் கே.வி.ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒளிப்பதிவாளர் நட்டி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

"'சதுரங்க வேட்டை' படத்தில் நட்டி நன்றாக நடித்திருக்கிறார். 'அயன்' படத்தில் சிட்டி ஜெகன் வேடத்திற்கு முதலில் நட்டியிடம் தான் பேசினேன். ஆனால் ஒளிப்பதிவாளராக அவர் பிஸியாக இருந்ததால் நடிக்க முடியாமல் போய்விட்டது" என்று கூறியிருக்கிறார் கே.வி.ஆனந்த்.

விஜய், ஸ்ருதிஹாசன், சுதீப் உள்ளிட்ட பலர் நடிப்பில் சிம்புதேவன் இயக்கவிருக்கும் படத்திற்கு நட்டி தான் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT