தமிழ் சினிமா

“மாமன்னனை கண்டுணர்ந்த நொடி...” - வடிவேலு பாடுவதைப் பகிர்ந்து நெகிழ்ந்த மாரி செல்வராஜ்

செய்திப்பிரிவு

சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வடிவேல் பாடும் பாடல் ஒன்றை பகிர்ந்து அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். காரில் சென்றுகொண்டிருக்கும் வடிவேலு “ஞாயிறு என்பது கண்ணாக, திங்கள் என்பது பெண்ணாக... செவ்வாய் கோவைப்பழமாக” என்ற பழைய பாடலை அழகாக பாடிக்கொண்டிருக்கிறார். ப்ளாக் அன்ட் ஒயிட்டிலிருக்கும் இந்த வீடியோவை பகிர்ந்துள்ள மாரி செல்வராஜ், “காதலும் தத்துவமும் நிறைந்த பாடல்களை பாடக்கூடியவராக மாமன்னனை நான் கண்டுணர்ந்த பாடலும் பயணமும் இந்த நொடி தான்” என பதிவிட்டு வடிவேலுவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கி இருந்த திரைப்படம் ‘மாமன்னன்’. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்த இப்படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். முக்கிய கதாபாத்திரத்தில் ஃபஹத் பாசில் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளிவந்த திரைப்படம், கடந்த 27ஆம் தேதி இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது. வெளியான நாள்முதல் இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

SCROLL FOR NEXT