தமிழ் சினிமா

திரையரங்க உரிமையாளர்கள் ரஜினிக்கு கோரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 'ஜெயிலர்' படம் 10-ம் தேதி வெளியாகிறது. இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ்குமார், யோகிபாபு, வசந்த் ரவி உட்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், ரஜினிகாந்திடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது. "ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் அனைவரும் திரையரங்கிற்கு வந்து படம் பாருங்கள் என்று பேசினார். அதில் எங்களுக்கு மகிழ்ச்சி. அதுபோல தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் 'ஜெயிலர்' திரைப்படம் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளனர்.

SCROLL FOR NEXT