தமிழ் சினிமா

ஜிகர்தண்டா பிரச்சினை சித்தார்த்துக்கு சரத்குமார் ஆதரவு

ஸ்கிரீனன்

'ஜிகர்தண்டா' தொடர்பாக சித்தார்த் கூறிய ட்விட்டர் கருத்துகளுக்கு நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார்.

சித்தார்த், லட்சுமி மேனன் நடிப்பில் கார்த்தி சுப்புராஜ் இயக்கியிருக்கும் படம் 'ஜிகர்தண்டா'. இப்படம் முதலில் ஜூலை 25ம் தேதி வெளியாகும் என்று அறிவித்தார்கள். ஆனால் ஜூலை 25ம் தேதி வெளியாகவில்லை.

இதனால் நடிகர் சித்தார்த், "ஜிகர்தண்டாவின் தயாரிப்பாளர், தனது தனிப்பட்ட முறையில், ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு குறித்து மற்ற தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களிடம் தெரிவித்துள்ளார். ஆனால் எங்களுக்கு எந்த விதமான அறிவிப்பும் வரவில்லை." என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

இதற்கு தயாரிப்பாளர் சங்க சார்பாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. "படத்தில் நடித்ததற்குரிய சம்பளத்தை வாங்கிய நடிகர் சித்தார்த், தயாரிப்பாளரின் பட வெளியீட்டுத் தேதியில் தலையிட எந்தவிதமான உரிமையும் இல்லை." என்று கூறினார்கள்.

இந்நிலையில் சித்தார்த்தின் ட்விட்டர் கருத்திற்கு நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தனது ஆதரவினை தெரிவித்துள்ளார். இது குறித்து, "ஒரு சினிமா வெளி வருவதில் அதில் நடித்த நடிகருக்கும் அக்கறை உள்ளது. ஜிகர்தண்டா பட விவகாரத்தில் அந்த படம் வெளி வர வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நடிகர் சித்தார்த் பேசி உள்ளார். தயாரிப்பாளர் இப்பிரச்சினையை பெரிதாக்கி இருக்க வேண்டாம்’’என்று கூறியுள்ளார்.

சரத்குமார் தனக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்து உள்ளதற்கு சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT