கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இணையத்தில் வெளியிட்டது படக்குழு.
'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூன் 30-ம் தேதி வெளியாகும் என படக்குழு இணையத்தில் அறிவித்தது. அதன்படி இன்று (ஜூன் 30) மாலை 6 மணியளவில் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்கள்.
'காற்று வெளியிடை' படத்தைத் தொடர்ந்து வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் கார்த்தி. இப்படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்து வருகிறது.
ரகுல் ப்ரீத் சிங், அபிமன்யு சிங், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் இப்படத்தின் பிரதான படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தைத் தொடர்ந்து, பிரபுதேவா இயக்கும் 'கறுப்பு ராஜா வெள்ளை ராஜா' மற்றும் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தவுள்ளார் கார்த்தி.