தமிழ் சினிமா

ஸ்டாண்ட் அப் காமெடியனை காதலிக்கிறார் காயத்ரி!

செய்திப்பிரிவு

சென்னை: தமிழில் '18 வயசு’ படத்தின் மூலம் அறிமுகமானவர் காயத்ரி ஷங்கர். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘ரம்மி’ , ‘மாமனிதன்’ உட்படப் பல படங்களில் நாயகியாக நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘விக்ரம்’ படத்தில் ஃபஹத் ஃபாசில் ஜோடியாக நடித்திருந்தார்.

இந்நிலையில், இவர் பிரபல, ஸ்டாண்ட் அப் காமெடியன் அரவிந்த்தைக் காதலித்து வருவதாகத் தகவலகள் வெளியாகியுள்ளன. சென்னை உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இவர் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். காயத்ரியும் அரவிந்த்தும் காதலிப்பதாகச் சமீப காலமாகத் தகவல் கசிந்தாலும் இதுகுறித்து இருவரும் மறுக்கவில்லை. அவருக்கு நெருங்கிய தோழி ஒருவர், காயத்ரி அவரை காதலிப்பதை உறுதிப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது

SCROLL FOR NEXT