தமிழ் சினிமா

உலகின் 5 வது பெரிய வைரமா?- மறுத்தார் தமன்னா

செய்திப்பிரிவு

சென்னை: நடிகை தமன்னா, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். தமிழில் ‘ஜெயிலர்’ படத்தை முடித்துள்ள அவர், தெலுங்கில் ‘போலா சங்கர்’படத்திலும் நடித்து முடித்துள்ளார். வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் கையில் மிகப்பெரிய மோதிரத்துடன் காட்சியளிக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. அது, வைர மோதிரம் என்றும் உலகின் 5-வது பெரிய வைரம் அது என்றும் நடிகர் ராம் சரணின் மனைவி உபாசனா தமன்னாவுக்கு அதைப் பரிசாகக் கொடுத்தார் என்றும் செய்திகள் வெளியாயின. இதன் மதிப்பு ரூ.2 கோடி என்றும் கூறப்பட்டது.

இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நடிகை தமன்னா, அந்தச் செய்தியை உடனடியாக மறுத்துள்ளார். “ஒரு போட்டோஷூட்டுக்காக அணிந்தது அது. வெறும் ‘பாட்டில் ஓபனர்’தான், அது வைரம் இல்லை” என்று தெளிவுப்படுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT