சென்னை: நடிகர் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ படத்தை முடித்துவிட்டார். இதில் பிரியங்கா அருள் மோகன், சிவராஜ் குமார் உட்படப் பலர் நடிக்கின்றனர். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இதை அடுத்து, தனது 50 படத்தை இயக்கி நடிக்கிறார். இதை சன்பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன் உட்படப் பலர் நடிக்கின்றனர். இதையடுத்து தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கும் படத்தில் நடிக்கிறார் தனுஷ்.
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தப்படம் வெளியாக இருக்கிறது. இதில் நடிகர் நாகார்ஜுனா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.
இந்தியில் ‘அனிமல்’ படத்தை முடித்துள்ள ராஷ்மிகா, ‘புஷ்பா 2’, ‘ரெயின்போ’ படங்களில் நடித்து வருகிறார்.