தமிழ் சினிமா

ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் அதிதி ராவ்?

செய்திப்பிரிவு

சென்னை: நாசர், வசுந்தரா நடித்த ‘காலைப்பனி’ மூலம் இயக்குநர் ஆனவர் ராஜேஷ் எம்.செல்வா. இதையடுத்து ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் கமல்ஹாசன், த்ரிஷா நடித்த ‘தூங்காவனம்’, விக்ரம் நடித்த ‘கடாரம் கொண்டான்’ படங்களை இயக்கினார். அடுத்து சரத்குமார் நடித்த ‘இரை’ வெப் தொடரை ஆஹா தளத்துக்காக இயக்கினார். இந்தத் தொடர் வரவேற்பைப் பெற்றது.

இப்போது தமிழ், தெலுங்கில் உருவாகும் படத்தை இயக்க இருக்கிறார். நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப் படத்தில் அதிதி ராவ் ஹைதாரி நாயகியாக நடிப்பார் என்று தெரிகிறது. இந்தப்படத்தை அடுத்து அவர், வெப் தொடர் ஒன்றை இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT