ஆர்யாவின் புதிய படத்துக்கு 'கஜினிகாந்த்' என்று பெயரிடப்பட்டுள்ளது. தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான 'பலே பலே மகாடிவோய்' படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் இது.
’ஹர ஹர மஹா தேவகி’ மற்றும் ’இருட்டு அறையில் முரட்டு குத்து’ படங்களை இயக்கிய சன்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்க ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா இப்படத்தை தயாரித்து வழங்குகிறார்.
இப்படத்தின் பூஜை புதன்கிழமை காலை நடைபெற்றது. இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக 'வனமகன்' சாயிஷா நடிக்கிறார். ஆர்.ஜே. பாலாஜி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
பாலமுரளி பாலு இசையமைக்க, பல்லு ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா ஜி.கே.படத்தொகுப்பை கவனிக்க, கோபி ஆனந்த் கலை இயக்குத்துக்கு பொறுப்பேற்றிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கவிருக்கிறது