தமிழ் சினிமா

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ டீசர் ஜூலை 28-ல் ரிலீஸ்

செய்திப்பிரிவு

சென்னை: தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசர் அவரது பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 28-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘சாணிக்காயிதம்’, ‘ராக்கி’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் படம் ‘கேப்டன் மில்லர்’. பீரியட் படமாக உருவாகும் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடிக்கிறார். நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இந்தப் படம் 3 பாகங்களாக உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த ஆறு மாதங்களாக இப்படத்தில் நடித்து வந்த அவருக்கான படப்பிடிப்பு ஜூன் 19-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் ஜூலை 28-ம் தேதி படத்தின் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT