சென்னை: பசுபதி, ரோகிணி, அம்மு அபிராமி, விவேக் பிரசன்னா உட்படப் பலர் நடித்து வெளியான படம், ‘தண்டட்டி’. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்திருந்தார். சுந்தரமூர்த்தி இசை அமைத்திருந்தார். ராம் சங்கையா இயக்கி இருந்தார்.
மண் சார்ந்த கதையாக உருவான இந்தப் படம் ஜூன் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. பின்னர் பிரைம் வீடியோவில் வெளியான இந்தப் படம் அதிலும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு ராம் சங்கையா மீண்டும் படம் இயக்குகிறார். கிராமத்துப் பின்னணியில் இந்தப் படமும் உருவாகிறது. இதில் நடிக்க முன்னணி நடிகர் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.