வினோத் இயக்கத்தில் கார்த்தி நடித்துவரும் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் பர்ஸ்ட் லுக் ஜூன் 30-ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார்கள்.
'காற்று வெளியிடை' படத்தைத் தொடர்ந்து வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் கார்த்தி. இப்படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்து வருகிறது.
ரகுல் ப்ரீத் சிங், அபிமன்யு சிங், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். ஜெய்ஸால்மர் மற்றும் பூஜ் பகுதிகளில் படத்தின் பிரதான காட்சிகளைக் காட்சிப்படுத்தியுள்ளது படக்குழு.
கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் இப்படத்தின் பிரதான படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 30-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் கார்த்தி. இதனை சூர்யாவின் '2டி' நிறுவனம் தயாரிக்கவுள்ளது.