தமிழ் சினிமா

யோகிபாபு நடிக்கும் புதிய படம் ‘வானவன்’-  டைட்டில் வீடியோ வெளியீடு

செய்திப்பிரிவு

யோகிபாபு அடுத்து நடிக்கும் புதிய படமான ‘வானவன்’ படத்தின் டைட்டில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதனை ‘மாவீரன்’ இயக்குநர் மடோன் அஸ்வின் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

மடோன் அஸ்வின் இயக்கத்தில் இரண்டாவது முறையாக யோகிபாபு இணைந்த ‘மாவீரன்’ திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்து ‘ஜெயிலர்’, ‘அயலான்’, ‘எல்ஜிஎம்’, ‘கங்குவா’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் யோகிபாபுவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

சஜின் கே சுரேந்தர் இயக்கும் இப்படத்துக்கு ‘வானவன்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. படத்தில் காளிவெங்கட், ரமேஷ் திலக், லக்ஷ்மி ப்ரியா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தொழில்நுட்ப குழுவினர் குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை. படத்தின் டைட்டில் வீடியோவை பொறுத்தவரை வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

SCROLL FOR NEXT