தமிழ் சினிமா

சூர்யாவின் ‘கங்குவா’ கிளிம்ப்ஸ் வீடியோ நள்ளிரவு 12.01 மணிக்கு வெளியீடு

செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள ‘கங்குவா’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ நள்ளிரவு 12.01-க்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 6 மொழிகளில் இதனை காண முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் படம் ‘கங்குவா’. சூர்யாவின் 42-வது படமாக உருவாகும் இதில் திஷா பதானி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா உட்பட பலர் நடிக்கின்றனர். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். 10 மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா 5 விதமான தோற்றங்களில் நடிக்கிறார்.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ‘கங்குவா’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு நள்ளிரவு 12.01 க்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம், இந்தி மொழிகளில் வீடியோவை காண முடியும்.

SCROLL FOR NEXT