தமிழ் சினிமா

‘மார்க் ஆண்டனி’க்கு கார்த்தி வாய்ஸ்

செய்திப்பிரிவு

சென்னை: விஷால், எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ள படம், ‘மார்க் ஆண்டனி’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்தப் படத்தில் ரிது வர்மா நாயகியாக நடிக்கிறார். செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர். மினி ஸ்டுடியோ சார்பில் வினோத்குமார் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். இந்தப் படம் செப்.15-ல் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்துக்கு குரல் கொடுத்திருக்கிறார் கார்த்தி. அவர் படத்தின் கதையை சொல்வது போல பேசியிருப்பதாகக் கூறப்படுகிறது.

‘பொன்னியின் செல்வன்’ படத்தில், கதையை அறிமுகப்படுத்த கமல்ஹாசன் குரலை பயன்படுத்தி இருந்தனர். சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தில் அசரீரி குரலுக்கு விஜய் சேதுபதி குரல் கொடுத்திருந்தார். இப்போது ‘மார்க் ஆண்டனி’ படத்துக்கு கார்த்தி குரல் கொடுத்துள்ளார்

          
SCROLL FOR NEXT