தமிழ் சினிமா

சிம்புதேவன் - யோகிபாபுவின் புதிய படம் ‘போட்’ - வீடியோ வெளியீடு

செய்திப்பிரிவு

சிம்புதேவன் இயக்கத்தில் யோகிபாபு நடிக்கும் புதிய படத்துக்கு ‘போட்’ (BOAT) என தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும், படத்தின் அறிமுக வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படம் மூலம் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்தவர் சிம்புதேவன். அவரின் ‘இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்’ படம் வரவேற்பை பெற்றது. கடைசியாக 2015-ம் ஆண்டு விஜய்யை வைத்து ‘புலி’ படத்தை இயக்கியிருந்தார். இதையடுத்து ‘கசட தபற’, ‘விக்டிம்’ போன்ற ஆந்தாலஜி படங்களில் பங்காற்றியவர் முழுநீள சினிமாவை எடுக்கவில்லை.

கிட்டத்த 7 வருடங்களுக்குப் பிறகு சிம்பு தேவன் இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்துக்கு ‘போட்’(BOAT) என தலைப்பிடப்பட்டுள்ளது. படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்கிறார்.

மேலும் இது தொடர்பான வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் கடலில் போட் ஒன்றில் யோகிபாபு சென்று கொண்டிருக்கிறார். அருகிலிருக்கும் சிம்புதேவன் ஆக்ஷன் என கூற படத்தின் டைட்டிலுடன் வீடியோ முடிகிறது. டீசர் விரைவில் வெளியாகும் என வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. வீடியோ:

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT