தமிழ் சினிமா

ஜூலை 15-ல் அனைத்து தொகுதிகளிலும் பயிலகம் தொடங்கும் நடிகர் விஜய்

செய்திப்பிரிவு

காமராஜரை போற்றும் வகையில் அவரது பிறந்தநாளான ஜூலை 15-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் ‘தளபதி விஜய் பயிலகம்’ ஆரம்பிக்கப்பட உள்ளதாக விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “விஜய்யின் சொல்லுக்கிணங்க ஜூலை 15-ம் தேதி காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அவரது சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தெரிவித்து கொள்கிறேன். அந்நாளில் மாணவ, மாணவிகளுக்கு, நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் வழங்குதல் போன்ற நலத்திட்ட உதவிகளையும் தங்களால் இயன்ற அளவில் செய்து சிறப்பிக்குமாறு கேட்டுகொள்கிறேன்.

மேலும் காமராஜரை போற்றும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் ‘தளபதி விஜய் பயிலகம்’ ஆரம்பிக்கப்பட உள்ளதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT