தமிழ் சினிமா

செல்வராகவனை இயக்குகிறார் தனுஷ்

செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அவர் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘காதல் கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’, ‘மயக்கம் என்ன’ படங்கள் வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில் தனுஷ் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். அதே நேரம் இயக்குநர் செல்வராகவன் இப்போது நடிகராக தன் பயணத்தைத் தொடர்ந்து வருகிறார். அவர் நடிப்பில் ‘மார்க் ஆண்டனி’ அடுத்து வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் தனுஷ் இயக்கி நடிக்கும் 50 வது படத்தில் செல்வராகவன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவர் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி இருக்கிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷண், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, எஸ்.ஜே.சூர்யா உட்பட பலர் நடிக்கின்றனர். இது கேங்ஸ்டர் கதை என்று கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT