தமிழ் சினிமா

கொடைக்கானலில் ‘கங்குவா’ வரலாற்றுக் காட்சிகள் படப்பிடிப்பு

செய்திப்பிரிவு

கொடைக்கானல்: சூர்யா, திஷா பதானி நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் படம் ‘கங்குவா’. சூர்யாவின் 42-வது படமாக உருவாகும் இதில் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா உட்பட பலர் நடிக்கின்றனர். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். 10 மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா 5 விதமான தோற்றங்களில் நடிக்கிறார்.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இப்போது கொடைக்கானல் பகுதியில் அடர்ந்த காட்டில் படமாக்கப்பட்டு வருகிறது. வரலாற்றுக் காட்சிகள் தொடர்பான படப்பிடிப்பு நடக்கிறது. இதில் நடிகர் சூர்யா பங்கேற்று வருகிறார். அவர் தொடர்பான காட்சிகள் 10 நாட்களில் முடிவடைவதாக இருந்தது. ஆனால் மேலும் 10 நாட்கள் தொடர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT