தமிழ் சினிமா

500 எபிசோடுகளை தொடும்: விஜய் டிவியின் முத்தழகு

செய்திப்பிரிவு

விஜய் டிவியில் 2021-ம் ஆண்டில் இருந்து ஒளிபரப்பாகி வரும் தொடர், ‘முத்தழகு’. திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 3.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடரில் ஷோபனா, முத்தழகு கதாபாத்திரத்திலும் ஆஷிஷ் சக்ரவர்த்தி, பூமிநாதன் என்ற பாத்திரத்திலும் நடிக்கின்றனர். மற்றும் வைஷாலி தனிகா, லட்சுமி வாசுதேவன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்து வருகின்றனர். ஏழை பெண்ணின் வாழ்க்கையில் பணக்கார கணவன் வந்தால் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து இந்தத் தொடரின் கதை செல்கிறது. இந்த தொடர் 500 எபிசோடுகளைத் தொட இருக்கிறது.

SCROLL FOR NEXT