தமிழ் சினிமா

நெல்சன் வெங்கடேசனுடன் இணைகிறார் அதர்வா

செய்திப்பிரிவு

சென்னை: தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்துராஜ் நடித்த ‘ஒரு நாள் கூத்து’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், நெல்சன் வெங்கடேசன். இந்த படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடித்த ‘மான்ஸ்டர்’ படத்தை இயக்கினார்.

அடுத்து ஐஸ்வர்யா ராஜேஷ், ‘ஜித்தன்’ ரமேஷ் நடித்த ‘ஃபர்ஹானா’ படத்தை இயக்கினார். இந்தப் படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது. இதை அடுத்து அவர் அதர்வா நடிக்கும் படத்தை இயக்குகிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

SCROLL FOR NEXT