தமிழ் சினிமா

’மாமன்னன்’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ்

செய்திப்பிரிவு

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘மாமன்னன்’ படத்துக்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’. ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரித்துள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், ஃபஹத் பாசிலுடன் வடிவேலு பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 29ஆம் தேதி பக்ரீத் பண்டிகையையொட்டி திரைக்கு வருகிறது.

இதுவரை காமெடி கதாபாத்திரங்களிலேயே நடித்து வந்த வடிவேலு இப்படத்தில் முதல்முறையாக மிகவும் சீரியசான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெய்லர் மற்றும் போஸ்டர்களில் வடிவேலுவின் கதாபாத்திரத் தோற்றம் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து சென்சாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படத்தைப் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள், படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT