தமிழ் சினிமா

5 நடிகர்கள் மீது நடவடிக்கை: தயாரிப்பாளர்கள் முடிவு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கப் பொதுகுழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில், தலைவர் முரளி ராமசாமி, துணைத் தலைவர்கள் ஜி.எம்.தமிழ்க்குமரன், அர்ச்சனா கல்பாத்தி, செயலாளர்கள் எஸ்.கதிரேசன், ஆர்.ராதாகிருஷ்ணன் உட்பட 400 தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

இதில், நடிகர், நடிகைகளின் கால்ஷீட் பிரச்சினை குறித்து பேசி தீர்வுகாண நடிகர்கள்- தயாரிப்பாளர்கள் அடங்கிய குழுஅமைப்பது, விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், ஓடிடி/சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் வியாபாரம் பற்றி பேசி முடிவெடுப்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் கால்ஷீட் குளறுபடி, முன்பணம் பெற்றுக்கொண்டு படப்பிடிப்புக்கு வராமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக 5 நடிகர்கள் மீது, நடிகர் சங்கத்துடன் பேசி நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT