தமிழ் சினிமா

கவிதாலயாவின் ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி

ஸ்கிரீனன்

நீண்ட நாட்களுக்கு பிறகு இயக்குநர் பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம், 'ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி' என்ற படத்தினை தயாரிக்கிறது.

2008ம் ஆண்டு பேரரசு இயக்கத்தில் அர்ஜுன் நடித்த 'திருவண்ணாமலை' படத்தினைத் தயாரித்தது கவிதாலயா நிறுவனம். அதனைத் தொடர்ந்து 'கிருஷ்ணலீலை' தயாரித்தது. ஆனால் அத்திரைப்படம் இன்னும் வெளிவரவில்லை.

இந்நிலையில் தற்போது பரத், நந்திதா நடிக்கும் 'ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி' என்ற புதிய படத்தினை தயாரிக்க இருக்கிறது. படிக்காத கிராமத்து இளைஞனுக்கும், நன்றாகப் படித்த பெண்ணுக்கும் திருமணம் நடைபெறுகிறது. திருமணத்திற்கு பிறகு அவர்களுக்குள் நடைபெறும் பிரச்சினைகளை நகைச்சுவையுடன் கூற இருக்கிறார்கள்.

இப்படத்தில் பரத்துடன் 21 நகைச்சுவை நடிகர்கள் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். இப்படத்தினை இயக்குக்கிறார் எல்.ஜி.ரவிச்சந்திரன்.

வடிவேலுவைப் போல கன்னடத்தில் பிரபல நகைச்சுவை நடிகரான கோமல் குமாரை இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்துகிறார்கள். முதற் கட்ட படப்பிடிப்பு பழனி, பொள்ளாச்சி, திண்டுக்கல் ஆகிய இடங்களில் நடைபெற்றது.

SCROLL FOR NEXT