படத்தின் போஸ்டர் 
தமிழ் சினிமா

வெள்ளிக்கிழமை வெளியாகும் 'மாமன்னன்' ட்ரெய்லர்: படக்குழு அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: நாளை (வெள்ளிக்கிழமை, ஜூன் 16) ‘மாமன்னன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. அண்மையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு நடைபெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கி உள்ள திரைப்படம் ‘மாமன்னன்’. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் ஃபஹத் பாசில் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில் படம் உருவாகி உள்ளது.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தொடங்கி அண்மையில் வெளியான பாடல்கள் வரையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. வரும் 29-ம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT