தமிழ் சினிமா

தமிழில் வருகிறது ‘சார்ல்ஸ் என்டர்பிரைசஸ்’

செய்திப்பிரிவு

சென்னை: ஊர்வசி கதையின் நாயகியாக நடித்துள்ள படம், ‘சார்ல்ஸ் என்டர்பிரைசஸ்'. சுபாஷ் லலிதா சுப்ரமணியன் இயக்கியுள்ள இதில், பாலு வர்கீஸ், கலையரசன், குரு சோமசுந்தரம் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜாய் மூவி புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் அஜித் ஜாய் தயாரித்துள்ளார். மலையாளத்தில் வெற்றி பெற்ற இந்தப்படம், 16-ம் தேதி தமிழில் வெளியாகிறது.

படம் பற்றி ஊர்வசி கூறும்போது, “இதில், மூடத்தனமான நம்பிக்கை கொண்ட அம்மாவாக நடித்துள்ளேன். அந்த அம்மாவுக்கு, மாலை 6 மணிக்கு மேல் பார்வையில் தடுமாற்றம் உள்ள மகன் இருக்கிறான். கலையரசனிடம் கொண்ட நட்பு மூலம் அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றம்தான் கதை. நட்பு என்பது ஆயுள் உள்ள வரை உடன் வரும். இதுதான் இப்படத்தின் ஹைலைட்” என்றார்.

SCROLL FOR NEXT