தமிழ் சினிமா

மீண்டும் தள்ளிப் போகிறது வாடிவாசல்

செய்திப்பிரிவு

நடிகர் சூர்யா, ‘கங்குவா’ படத்தில் இப்போது நடித்து வருகிறார். அவர் ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்திற்கு முன்பே வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ படத்தில் சூர்யா நடிப்பார் என்று கூறப்பட்டது. ‘விடுதலை’ முடிவடையாததால் ‘கங்குவா’ படத்தில் நடிக்கத் தொடங்கினார் சூர்யா. அது முடிந்ததும் ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ‘விடுதலை 2’ பாகம் பணிகளில் வெற்றிமாறன் இருப்பதால், ‘வாடிவாசல்’ மீண்டும் தள்ளிப் போகும் என்று கூறப்படுகிறது. இதனால், அதற்கு முன் வேறொரு படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT